Friday, May 27, 2011

தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி



தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறந்த சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் 14-வது ஆண்டு நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியை ஒட்டி, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்திவருகிறது.

விதிமுறைகள்
Ø  சிறுகதைகள் தமிழனின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.
Ø  சிறுகதைகள் தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø  சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகாதவையாகவும் சொந்தக் கற்பனையில் உருவானவையாக இருப்பதோடு அதற்கான உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
Ø  கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம்.
Ø  ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம்.
Ø  போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
Ø  கடைசி தேதி ஜூன் மாதம் 4-ம் தேதி.
Ø  போட்டி முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் பிரசுரிக்கப்படும்.
Ø  போட்டி தொடர்பாக கடிதப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்.
முதல் பரிசு ரூ.10,000
2-ம் பரிசு ரூ.5,000
3-ம் பரிசு ரூ.2,500
5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250.

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி
தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி,
தினமணி நாளிதழ்,
எண்-29, 2-வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை-600058.

Tuesday, May 17, 2011

குமரி மாவட்டத்தில் மத அமைப்புகள் கையில் சிக்கிய அரசியல்

குமரி மாவட்டத்தில் மத அமைப்புகள் கையில் அரசியல் சிக்கி உள்ளதால் அவர்கள் நினைத்தது நடக்கும் அவல நிலை எழுந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று முடிந்த தேர்தல்கள் இதனை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
2004- பொதுத் தேர்தலின் போது அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசுக்கு எதிராக ஒன்று திரண்ட கிறிஸ்தவ மத அமைப்புகள் அப்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். அப்போது ஜெயலலிதா அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடைச்சட்டம் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2006-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த நிலை தொடர்ந்தது. அத்தேர்தலில் திமுக அணி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற காரணமாக இருந்தது.
இதேபோல் 2009-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹெலன் டேவிட்சன் வெற்றிக்கும் இதே மத அடிப்படை அரசியல் கை கொடுத்தது.
இந்த தேர்தல்களிலிருந்து கிறஸ்தவ அமைப்புகள் ஒன்றை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டன. குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்தவர் பெரும்பாண்மையாக உள்ள நிலையில் இம்மாவட்டத்தின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக தாங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதை நன்றாக புரிந்து கொண்டன.
குறிப்பாக கிறிஸ்தவ ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லுமளவுக்கு செயல்பட்டு வரும் பெந்தேகோஸ்தே அமைப்புகள் இதனை வலுவாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜயதரணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லீமாறோஸ் மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர் ஜெயசீலன் ஆகியோருக்கு எதிரான இந்த வெற்றியை பெற அவர்கள் இந்த மதவாத அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
சுமார் 40க்கும் மேற்பட்ட பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை ஒருங்கிணைத்து பல லட்சங்கள் பணம் கைமாறியபின் அவர்கள் தங்களது சபைக்கு வரும் விசுவாசிகளை விசுவாசமாக காங்கிரஸுக்கு வாக்களிக்கச் செய்தனர். ஆனால் அவர்கள் வாங்கிய பணத்தை மட்டும் விசுவாசிகளுக்கு கொடுக்காமல் விசுவாசமாக அமுக்கிக் கொண்டனர்.
அவர்களது மத பணி தொடர்கிறது. கர்த்தரின் பெயரால் அவர்கள் வாழ்கிறார். கர்த்தரின் பெயரால் அவரது விசுவாசிகள் அரசியல் நிலையை புரிந்து கொள்ளும் தன்மையற்ற மண்டூகங்களாக மாற்றப்படுகின்றனர்.
இதன் மூலம் இந்த பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்கு இன்னும் ஒரு நன்மையும் இருக்கிறது.
ஏழைகள், உழைப்பாளிகளின் உழைப்பையும் அவர்களது செல்வத்தையும் சுரண்ட சிந்தனையற்றவர்களாக மக்களை மாற்றும் அணுகுமுறைக்கு இது மேலும் வலு சேர்க்கிறது.
சிந்திக்காத மனிதன் விலங்குக்கு சமம்.
தனது உழைப்பை திருடுபவனை அடையாளம் காணாதவன் இந்த உலகத்தில் எதனுடன் ஒப்பிட தகுதியற்றவனாகிறான்.
தாக்குண்டால் சிறு புழுகூட எதிர்ப்பைக் காட்டும். கர்த்தர் மக்களை நல்வழிப்படுத்த நல்லாயனை உவமையாகத் தான் கூறினார். ஆனால் இந்த போதகர்கள் மனித மந்தையை உருவாக்குகிறார்கள். தங்களுக்கு மேய்க்க....