உன் கூரிய அலகுகளால்
என் குஞ்சுகளைக் கொத்தித் தின்றாய்
என் குஞ்சுகளின் மரண ஓலத்தை
நீ செவி மடுக்கவே இல்லை.
ஆனால் உன் குஞ்சுகளின்
பசிக்குரல் மட்டுமே உனக்குக்
கேட்கிறது
நீ கொத்திக் கிழித்த எனது
குஞ்சுகளின் முகங்களை மறக்க
முயலும் முன்பே
நீ உன் குஞ்சுகளின்
அடுத்த வேளை உணவுக்காக
மீண்டும் என் கூட்டை
வட்டமிடத் துணிந்தாய்....
நான் என் குஞ்சுகளிடத்தில்
உனது தன்மை... தப்பிக்கும் வழி
குறித்து எச்சரிக்கை செய்தேன்.
நீயோ...
உண்டது செரிக்கும் முன்பே
என் குஞ்சுகளை
உன் குஞ்சுகளுக்கு
உணவாகத் தருவதாக
மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறாய்...
No comments:
Post a Comment