மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் எம்.கே. பாந்தே 2011, ஆகஸ்ட் 20 சனிக்கிழமை காலமானார். 86 வயதான தோழர் பாந்தேவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளியன்று மாலை தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார். வாழ்க்கைக் குறிப்பு: தோழர் பாந்தே அவர்களின் சுமார் எழுபதாண்டு கால பொதுவாழ்வு, அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே துவங்கிவிட்டது. அவர் இந்தியாவின் உழைக்கும் வர்க்க இயக்கத்தின் உன்னதத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். 1943இல் சோலாப்பூர் மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். 1943இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப் பை முடித்தபின், அரசியல் மற்றும் பொருளாதாரத்திற் கான கோகலே இன்ஸ்டிட்யூட் டில் முனைவர் (டாக்டர்) பட்டத்தைப் பெற்றார். தோழர். பாந்தே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோலாப்பூர் நகரக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றார். பின் னர் அவர் கோவா விடுதலைப் போராட்டத்திலும் முன்னணி பங்கு வகித்தார். தொழிற்சங்க இயக்கத்திற்கு தோழர் பாந்தேயின் பங்களிப்பு மகத்தானதாகும். 1960களில் ஏஐடியுசி மையத்தில் செயலாளராகப் பணியாற்றிய தோழர் பாந்தே, சிஐடியுவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறி, உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கு அர்பணிப்புடனும் திறமையோடும் பணியாற்றினார்.1990இலிருந்து 1999 வரை சிஐடியுவின் பொதுச் செயலாளராகவும், பின்னர் 2010வரை அதன் தலைவராகவும் செயலாற்றினார். கடந்த முப்பதாண்டுகளில் நாட்டில் நடைபெற்ற பெரிய அளவிலான அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு, மத்திய தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையைக் கட்டுவதில் முக்கியமான பங்கினை வகித்தார். தன்னை மார்க்சிய-லெனினியத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தோழர் பாந்தே உழைக்கும் வர்க்க இயக்கத்தை சோசலிசத் தத்துவத்துடன் பிணைத்திடவும், தொழிலாளர் வர்க்கம் சமூக மாற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தன்னுடைய புரட்சிகரப் பங்களிப்பினை உணரக்கூடிய விதத்திலும் அவர்களின் அரசியல் உணர்வினை உயர்த்துவதில் தொடர்ந்து விடாப்பிடியாக முயற்சித்து வந்தார். கட்சி 1964இல் பிரிந்த போது, திருத்தல்வாதத்திற்கு எதிராக உறுதியாக நின்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார் பாந்தே. தன்னுடைய புரட்சிகர வாழ்க்கையில் அவர் நாலரை ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் செலவிட்டார். 1978இல் நடைபெற்ற கட்சியின் பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகவும், பின்னர் 1998இல் நடைபெற்ற 16 ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். தோழர் பாந்தே நாட்டில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வளர்த்தெடுத்திட தன் இறுதி மூச்சு வரை ஓய்வறி யாது உழைத்தார். அனைத்துத் தொழிற்சங்க அமைப்புத் தலை வர்களும் அவரிடம் அளவிடற்கரிய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர். எவ்விதமான சாதாரண தொழிலாளியிடமும் மிகவும் நேசத்துடன் பழகக் கூடிய தலைவராக இருந்தார். அவரது வாழ்க்கை மிகவும் எளிமையான ஒன்றாகும். தோழர் பாந்தேவின் மனைவி தோழர் பிரமிளா பாந்தே. |
Saturday, August 20, 2011
எம்.கே.பாந்தே காலமானார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment