1992 ஜூலை முதல் 1994 மே வரையிலான காலகட்டம்…
வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு வருடங்கள்…
உறவுகள் வீணடித்ததாகக் கூறினாலும்
மனம் ஒப்புகொள்ள மறுக்கிறது.
நட்புகளின் ஆழங்கள் குறித்த தேடல்கள்
இன்றும் தொடர்வதால்
வீணல்ல அந்த வருடங்கள்
சம்பாத்தியங்கள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய வருடங்கள்…
நண்பர் பால்ராஜ்…
இனிய அப்பழுகற்ற நட்புக்கு இலக்கணமானவர்
நிறைய சாதிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்
சினிமா துறையை பற்றிய
அனைத்து வினாக்களுக்கும் அவரிடம் விடையுண்டு
அவருள் இருந்த நல்ல ஒரு படைப்பாளியை…
வல்லுநரை….
சமூக பார்வையாளராக மாற்றத் தவறிய
அவரது பெற்றோர் மீது…
சமூகத்தின் மீது…
எப்போதும் எனக்கு வருத்தம் உண்டு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு - நேற்று
ஒரு துடிப்பான தொடர்பு
என்ன மச்சான்…. எப்படிடா இருக்க….
என்ற குரல் கேட்டபோது எந்த மிகையுமில்லாமல்
கண்கள் பனித்தன.
இப்போது ஆசிரியர் பணி என்று அப்போதுதான் அறிந்தேன்
மகிழ்ச்சிதான்
ஆனால் ஒரு படைப்பாளியை இழந்த வருத்தம்
இப்போதும்.
நண்பர் சுரேஷ்…..
என்ன ஒரு திறமை என வியக்க வைத்த சுரேஷ்
நடனம்…
விளையாட்டு…
இசையின் மீதான ஆர்வம்…
எப்போதும் சிரிப்போடு இருக்கும் முகம்…
மச்சி புதிய ஜட்டி வாங்கியிருக்கேன்…
பார்ட்டிக்கு மறக்காமல் வந்திடு
என அழைக்கும் அவரது துள்ளல் பேச்சு
சினிமா துறையில் சாதிப்பேன்
என்ற அவரது பேச்சு கனவாகி போயிருக்கிறது
வங்கி பணியோடு வாழ்க்கையில்
திருப்திகொள்ள பழகி விட்டார்
இல்லை
இந்த சமூகம் பழக்கி விட்டது.
நண்பர் தேவநேயன்…
17 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்கு
சரடு பின்னியது
இவரது facebook
நன்றி நண்பா நன்றி…
வெட்டப்பட்ட மரத்தின் வேர்கள்
பாங்காய் மரத்தினை துளிர்க்க வைக்குமே
அதுபோல
துளிர்த்து விட்டோம்
ஒருமரத்தின் கிளைகளாய்.
எல்லாம் நான் பார்த்துகிறேன்…
என்று பொறுப்பெடுக்கும்
உனது குணம்
அப்படியே…
நீ மாறவில்லை…
மாற்றம் தேவையில்லை.
உனது விருப்பப்படியே
தமிழியக்கங்களோடுள்ள
தொடர்புகளோடு
குரல் சந்திபில் இணைந்த நாம்
பிற நண்பர்களோடு
மீண்டும் ஒரு முக சந்திப்பில்
இணைவோம் என்ற நம்பிக்கையில்…

நன்றி நண்பா...
ReplyDeleteபழைய நினைவுகளை
மீட்டெடுத்துக் கொடுத்தமைக்கு...
ஆழமாக அசை போட்டால்
கண்ணீர்த் துளிகள்
கணக்கில்லாமல் கொட்டுகிறது...
OPP என்ற மந்திரச்சொல்
மனமெல்லாம் பரவிக்கிடக்கிறது...
அடுத்த சந்திப்பு
அருகில் இருக்கிறதா ?
அல்லது அடுத்த பிறவியில்
அனைவரும் சேர்வோமா...?
காலத்தின் கையில்
கணக்கை ஒப்படைத்து
கடமையைச் செய்வோம்
கண் மூடும்வரை...
மிகவும் மகிழ்ச்சியான பதிவு நன்றி
ReplyDelete